மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.., அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!

0
மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.., அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!
மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.., அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!

தமிழகத்தில் நடந்த சட்ட பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், 500 டாஸ்மாக் கடைகள் மூட இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போல் கடைகளை குறைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை கோயில், கல்வி வளாகங்கள் அருகே இருந்த சுமார் 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் மதுவை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, சமீபத்தில் கூட டாஸ்மாக்கில் மதுவை அதிக விலைக்கு விற்ற விற்பனையாளர்கள் 1977 பேர் மீது நடவடிக்கை எடுத்து 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாசிப்பயறு faceக்கு மட்டும் இல்ல., உங்க தலைமுடி growth க்கும் உதவியா இருக்கும்., இந்த மாதிரி try பண்ணி பாருங்க!!

அதே போல் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்வதாக புகார் குறித்து எந்தக் கடை என்று குறிப்பிட்டு புகார் கூறினால் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு ஒரு சில தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புகார் பெறப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here