அரசியல் பிரபலங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல இதான் காரணம் – அமைச்சர் செல்லூர் ராஜூ..!

0

கொரோனா சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பி இருக்கும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ..!

கொரோனா பாசிட்டிவ் என வந்த பொழுது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாசிடிவ் என வந்த பொழுது அதைக் கண்டு பயப்படவில்லை தைரியமாக தான் இருந்தேன். நம்மால் நம் குடும்பத்தினருக்கு வந்துவிட்டது என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படவில்லை. நான் பதவியில் இருக்கும் பொழுது அந்த பதவி சுகத்தை என் குழந்தைகளும் என் குடும்பத்தாரும் அனுபவிக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் சிகிச்சையில் இருந்த பொழுது தலைவர்கள் பலரும் என்னை நலம் விசாரித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் என்னை நலம் விசாரித்தது தமிழர் பண்பு சார்ந்த விஷயம். திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு அந்தப் பண்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைக்கு குறித்து பதில்..!

அரசியல் பிரபலங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவது குறித்து அவர் கூறியதாவது, முதலில் என் மனைவிக்கு தொற்று ஏற்பட்டபோது அவர் பெண் என்பதால் அந்த பிரைவசிக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். பின்னர் எனக்கும் தொற்று உறுதியானதால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தனியார் மருத்துவமனையில் இருந்தாலும் அரசு மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டுக்கொண்டிருந்தேன்.

சாத்தான்குளம் போலீஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் – சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது தமிழக அரசு..!

தனியாராக இருந்தாலும் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் ஒரே மருத்துவம் தான். தனியாரில் குறைந்த அளவு நோயாளிகள் இருப்பார்கள். அரசு மருத்துவமனையில் அதிக நோயாளிகள் இருப்பார்கள். அமைச்சர் என்கிற முறையில் நான் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர்கள் என்னை மட்டும் கவனிக்கிறார்கள் என்கிற விமர்சனம் ஏற்படலாம். அதனால்தான் தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here