சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0
CBSE Exams
CBSE Exams

சிபிஎஸ்இ வாரியம் 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 15 புதன்கிழமை வெளியிடும் என அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு 91.10 சதவீத மாணவர்கள் சிபிஎஸ்இ வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மாணவர்களுக்கு நேற்று 12ம் வகுப்பு முடிவுகள் வெளியான பின்னர் பத்தாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், இப்போது ஜூலை 14 செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியிடப்படாது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெளிவுபடுத்தியுள்ளார். சிபிஎஸ்இ வாரியம் 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 15 புதன்கிழமை வெளியிடும் என அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு 91.10 சதவீத மாணவர்கள் சிபிஎஸ்இ வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ட்வீட் செய்து, நாளை வெளியிடப்படவுள்ள முடிவு குறித்து தெரிவித்தார். என் அன்பான குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, சிபிஎஸ்இ வாரியம் பத்தாம் வகுப்பு முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று பதிவிட்டு உள்ளார். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில், அதாவது சிபிஎஸ்இ 12 வது தேர்வில், இந்த ஆண்டு மொத்தம் 88.78 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு இது 83.40 சதவீதமாக இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு, தகுதி பட்டியலை வாரியம் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here