கல்விக் கொள்கையில் மாநிலகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்.., தேசிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் பேட்டி!!

0
கல்விக் கொள்கையில் மாநிலகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்.., தேசிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் பேட்டி!!
கல்விக் கொள்கையில் மாநிலகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்.., தேசிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் பேட்டி!!

தமிழகத்திற்கென ஒரு கல்விக்கொள்கை இருக்க பிரச்சினைகள் நிறைந்த தேசிய கல்விக் கொள்கை எதற்கு? என்பது போல் அமைச்சர் விளாசி தள்ளியுள்ளார்.

கல்விக்கொள்கை:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு (AICTE) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பொதுமக்களை கவரும் வகையில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மூலம் சில நலத்திட்டங்கள் வரவேற்கும் வகையில் இருந்தாலும் பல திட்டங்கள் பிரச்சனைக்குரியதாக இடம்பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் 3ம் வகுப்பு குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு திட்டத்தையும் குறிப்பிடலாம். இந்த குழந்தைகள் எவ்வாறு தேர்வு எழுத முடியும். இதன் மூலம் பல குழந்தைகள் கல்வியை இடைநிற்றல் செய்து எதிர்காலமே இல்லாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் வெளிநாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக பிராந்திய மொழியுடன் ஆங்கில மொழியை மாணவ செல்வங்கள் கற்று வருகின்றனர்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கும்.., ஆனா எனக்கு.., உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்!!

இந்நிலையில் “பூனை செல்வதற்கு ஒரு ஓட்டை, எலி செல்வதற்கு ஒரு ஓட்டையா” என முன்னாள் முதல்வர் அண்ணா கூறியது போல மூன்றாவதாக ஒரு மொழியை திணிக்க கூடாது. மாநிலங்களுக்கென தனி கல்விக் கொள்கை உள்ளது. அதை ஊக்கப்படுத்தவும் பின்பற்றவும் முழு சுதந்திரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.” என சூசகமாக ஆதங்கத்தை அமைச்சர் பொன்முடி வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இவரின் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here