முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அனுமதியில்லாமல் மதுபான பார் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது நீதிமன்றம் அனுமதி வழங்கிய பார்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் மதுபான விற்பனை ரசீது வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும், மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை 99 சதவீதம் தடுத்துள்ளோம் என்று அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.