தமிழகத்தில் கணிசமாக உயர்ந்த பால் மற்றும் தயிரின் விலை – ஷாக்கில் பொதுமக்கள்!!

0
தமிழகத்தில் கணிசமாக உயர்ந்த பால் மற்றும் தயிரின் விலை - ஷாக்கில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் இருக்கும் தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் பாலின் விலையை கணிசமான அளவு உயர்த்தி உள்ளன.

பால் விலை உயர்வு:

தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக விளங்குவது பால். இந்நிலையில் கிராமத்து பகுதியில் வாழும் மக்கள் அதிகமானோர் பசுவின் இயற்கை பாலையே உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மக்கள் பாக்கெட் பால்களை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பால் விற்பனை அரசு நடத்தும் ஆவின் பால் நிறுவனம் மற்றும் தனியார் பால் நிறுவனம் மூலமும் செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 38.26 லட்சம் லிட்டர் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்றது. மீதமுள்ள லிட்டர்களை தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அதிகமான மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்வது தனியார் பால் நிறுவனங்கள் தான்.

Milk Supply

தற்போது தனியார் பால் நிறுவனமான சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. அது போன்று ஹட்சன் தனியார் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. இதனால் மற்ற தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாலின் விலை உயர்ந்துள்ளதால் பால் சார்ந்த அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here