நேபாளம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நேபாளத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை மட்டும் 130 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று வங்கக்கடல் பகுதிகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது. இன்று கூட பஞ்சாபில் அதிகாலை 1:13 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.