இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை கொண்ட மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால், ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கடவுள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடைபெறும் முக்கிய வழிபாடுகளுக்கு இந்திய அரசானது மக்களுக்கு பொது விடுமுறையும் அளித்து வருகிறது. இந்த முக்கிய வழிபாடுகளில் சிலவற்றிற்கு கால நேரத்தை பொறுத்து அவ்வப்போது தேதியும் மாற்றப்படுவது வழக்கம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த வகையில் சமீபத்தில் தான், விநாயகர் சதுர்த்திக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17-லிருந்து செப்டம்பர் 18 க்கு மாற்றி அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, இஸ்லாமிய பண்டிகையான மிலாது நபிக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தெலுங்கானா மாநில அரசானது பிறையை வைத்து இந்த மிலாது நபிக்கான பொது விடுமுறையில் மாற்றம் ஏற்படலாம் என குறிப்பிட்டு கூறியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் இந்த பொது விடுமுறையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.