மைக்ரோசாப்ட்லிருந்து பில் கேட்ஸ் வெளியேறியதற்கு பெண் ஊழியருடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் காரணமா?? – வெளியான பகிர் தகவல்!!!

0
மைக்ரோசாப்ட்லிருந்து பில் கேட்ஸ் வெளியேறியதற்கு பெண் ஊழியருடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் காரணமா?? - வெளியான பகிர் தகவல்!!!
மைக்ரோசாப்ட்லிருந்து பில் கேட்ஸ் வெளியேறியதற்கு பெண் ஊழியருடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் காரணமா?? - வெளியான பகிர் தகவல்!!!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து இணை நிறுவனர் பில் கேட்ஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விலகினார். இவர் விலகியதற்கு தனது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரிடம் ஏற்பட்ட நெருக்கமான  உறவு தான் காரணம் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இவர் மைக்ரோசாப்ட்லிருந்து விலகியபோது இனி பொதுச் சேவைகளில் ஈடுபடப் போவதாகவும் மற்றும்  அவர் ஏற்கெனவே தனது மனைவியுடன் இணைந்து தொடங்கிய அறக்கட்டளையில் முழுக் கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்தார். பிறகு 2021 ஆம் மே மாத தொடக்கத்தில் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தங்களது 27 வருட திருமண உறவை முறித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.ஆனால் தற்போது பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து விலகியதற்கு 2000 ஆம் ஆண்டு அதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட உறவு தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாப்ட்லிருந்து வெளியேறிய பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட்லிருந்து வெளியேறிய பில் கேட்ஸ்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது சம்மந்தமாக மைக்ரோசாப்ட் கூறியதாவது 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பில் கேட்ஸ் மற்றும் அந்த பெண் ஊழியர் உறவு குறித்து புகார் வந்ததாகவும், எனவே , ஒரு வெளி நிறுவனத்தின் உதவியுடன் இதற்குரிய விசாரணை நடத்தபட்டதாகவும் இதையடுத்து பில்கேட்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து விலகினார் எனவும் தெரிவித்துள்ளது.65 வயதான பில்கேடஸ் உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.இவர் 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகினார். பின்னர் 2020 ஆம் ஆண்டு அவர் முழுவதுமாக கணினி உலகிலிருந்து வெளியேறினார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here