
இந்தியாவில் 10 அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதன்படி, குஜராத் (GT), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் லக்னோ (LSG) ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
இதையடுத்து இன்று 4வது இடத்தை பிடிப்பதற்காக, ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக மும்பை (MI) அணியும், குஜராத் (GT) அணிக்கு எதிராக பெங்களூர் (RCB) அணியும் போட்டியிட உள்ளனர். இந்த போட்டியில் மும்பை (MI) மற்றும் RCB அணிகள் வெற்றி பெற்றால், எந்த அணி அதிக ரன் ரேட்களை வைத்துள்ளதோ அதன் அடிப்படையில் 4 வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மாறாக மும்பை (MI) மற்றும் RCB ஆகிய இரு அணிகளில், ஏதேனும் ஒரு அணி வெல்லுமேயானால் வெற்றி பெறும் அணி நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். மேலும், ஒருவேளை மும்பை (MI) மற்றும் RCB ஆகிய இரு அணிகளும் SRH மற்றும் GT அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தால், புள்ளிப் பட்டியலின் 4 வது இடத்திற்கு கடுமையான போட்டி நடைபெறும். அதாவது, RCB மற்றும் MI அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அந்த 4 வது இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் இடம் பெறும். இதையடுத்து, இந்த 3 அணிகளில் அதிக ரன் ரேட் வைத்துள்ள அணியே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.