நாட்டை உலுக்கிய பலத்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானதால் அச்சத்தில் உறைந்த மக்கள்!

0

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

பயங்கர நிலநடுக்கம்:

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.  பல லட்சம் மக்களை காவு வாங்கியுள்ள இந்த வைரஸை முழுமையாக அழிக்கும் வழி இன்னமும் வந்த பாடில்லை.  இந்த நிலையில் எண்ணெய் வளம் மிகுந்த மெக்சிகோ நாட்டில் இயற்கை பேரிடரின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனால் அந்த நகரத்தின் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதாவது,  மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் காலை 7.17 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது மேலும், ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த பலத்த நிலநடுக்கத்தால் மெக்சிகோவில் கட்டிடங்கள் குலுங்கி ஆட்டம் கண்டன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.  இது குறித்து, மக்கள் அச்சத்தின் விளிம்பில் உள்ளனர்.

இதற்கு முன்பும் கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டின் தெற்கு பகுதியில் ஒக்சாக்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒசாக்கா மட்டும் இன்றி 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உணரப்பட்டதாக அப்போது தகவல் வந்தது குறிப்பிடத்  தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here