மெக்சிகோ சிட்டி மெட்ரோ ஓவர் பாஸ் சரிவு !!!

0

மெக்சிகோ சிட்டி மெட்ரோ ஓவர் பாஸ் சரிவு !!!

திங்கள்கிழமை இரவு மெக்ஸிகோ சிட்டி மெட்ரோ ரயில் கார்களை ஏற்றிச் சென்ற ஓவர் பாஸ் சரிவு. இந்த விபத்து இரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது. ஓவர் பாஸ் சரிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் 70 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நாட்டின் உள்ளூர் டிவியில் கார்களின் மேல் ஓவெர் பாஸ் விழும் இந்த காட்சி பதிவாகியுள்ளது. மெக்ஸிகோ நாட்டின் மேயர் கிளாடியா ஷெய்ன்பாம் இது குறித்து கூறுகையில் “தீயணைப்பு வீரர்கள், பொதுப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு மருத்துவமனைகள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்”.

வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் மெக்ஸிகோ நகர மேயராக இருந்தபோது இந்த பாதை கட்டப்பட்டது. “மெட்ரோவுடன் இன்று நடந்தது ஒரு பயங்கரமான சோகம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம் ”என்று எப்ரார்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here