பிளைட்ல மட்டும் இல்லங்க இனி பஸ்ல கூட பறந்து போலாம்… அறிமுகமானது கேபிள் பேருந்து சேவை!!

0

மெக்ஸிகோ நாட்டில் புதிதாக கேபிள் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கேபிள் பேருந்தின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

வளர்ச்சி அடைந்த மேற்கித்திய நாடுகள் பொதுவாகவே நடைமுறை விஷயங்களில் புதுமைகளை புகுத்தி  வருகின்றன. அது போன்ற ஒரு புதிய முயற்சியை மெக்ஸிகோ நாடு செயல்ப்படுத்தியுள்ளது. நாம் பேச்சு வழக்கில் ‘பஸ்ல பறந்து போலாம்’ என்று கூறுவோம். தற்போது மெக்ஸிகோ அதை உண்மையாக்கியுள்ளது. ஆம். அந்நாட்டில் கேபிள் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 90 லட்சம். எனவே அந்நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வேகமாக மக்கள் பயணம் செய்யவும் கேபிள் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த கேபிள் பேருந்து குவாடெபெக் என்ற பகுதியில் சுமார் 9.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும்.

ஒரு சமயத்தில் இந்த கேபிள் பேருந்தின் ஒரு கேபினில் 10 பேர் வரை பயணிக்கலாம். கொரோனா தொற்று பரவல் உள்ளதால் தற்போது 6 பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் மத்தியில் இந்த புது ரக பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here