மீண்டும் ஒன்று கூடிய மெட்டிஒலி நாயகிகள் – வைரலாகும் 90ஸ் கிட்ஸ் மெமோரிஸ்!!

0

சன் டிவியில் சக்கை போடு போட்ட சீரியலான மெட்டி ஒலியில் நடித்த நடிகைகள் தற்போது ஒன்று சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மெட்டி ஒலி

சன் டிவியில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சீரியல் என்றால் மெட்டிஒலி தான். ஒரு குடும்பத்தில் நடக்கும் எதார்த்த கதையை மையமாக வைத்து சீரியல் எடுக்கப்பட்டிருக்கும். மேலும் அக்கா தங்கைகள் பாசம், கணவரின் கொடுமை, ஒரு பெண் புகுந்த வீட்டில் படும் பாடு அனைத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் இந்த சீரியல் இருந்தது.

இந்த சீரியலை கோபி இயக்கினார். மேலும் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதாவது விஜியின் கணவராகவும் நடித்திருந்தார். அவரின் பொறுமை, மனைவி மேல் இருக்கும் பாசம் அனைத்தையும் வைத்து கோபி போல தான் கணவர் வேண்டும் என்று 90ஸ் காலத்து இளசுகள் கூறி வந்தனராம்.

அந்த அளவிற்கு சீரியல் பிரபலமடைந்தது. தற்போது சன் டிவியில் மறு ஒளிபரப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. லீலா செல்வத்திற்கு தற்போது அதிக ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

லீலா செல்வத்தை வைத்து வாட்ஸ்ஆப் லவ் ஸ்டேட்டஸ் எல்லாம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த சீரியலில் நடித்த அக்கா தங்கைகள் இப்பொழுது பல சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்த லீலா, விஜி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here