
பயணிகளின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மெட்ரோ சேவையை இரவு 12 மணி வரை நீடித்துள்ளதாக ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 2.4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் இவர்களை குஷிப்படுத்தும் விதமாக மெட்ரோ நிர்வாகம் தினம் தினம் புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) மட்டும் மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை இயக்கப்படவுள்ளதாக ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு காரணம் என்னவென்றால் வரும் மார்ச் 19 தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் A.R.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனால் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவையை இரவு 12 மணி வரை நீடித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.