இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கு புதிய கட்டுப்பாடு.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கு புதிய கட்டுப்பாடு.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கு புதிய கட்டுப்பாடு.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை எளிமையாகுவதற்கு, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதுடன் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்த வகையில், தான் பஸ், ரயிலை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த மெட்ரோ ரயில் சேவையானது, தற்போது சென்னையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடந்த பட்ஜெட்டில் மதுரை மற்றும் கோவையிலும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.8,500 கோடியை, 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்து. இதனை தொடர்ந்து, சென்னையில், போக்குவரத்து சேவையை எளிமையாக்க, மாநகர பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய 3 பயணங்களுக்கும் ஒரே டிக்கெட் என்ற திட்டத்தை, அறிமுகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போட்றா வெடிய.., அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்வு., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

இந்நிலையில் மெட்ரோ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயண அட்டையை மெட்ரோ ரயிலின் டிக்கெட் கவுண்டர்களிலும், வாகன நிறுத்தும் இடத்திலும் பெற்று கொள்ளலாம். இத்தகைய நடைமுறை ஏப்ரல் 19ம் தேதிக்குள் அமலுக்கு வர உள்ளதால், மெட்ரோ ரயில் பயணிகள் விரைவில் பயண அட்டை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாகனம் நிறுத்தும் இடத்தில், பணமில்லா பரிவர்த்தனை நடைபெற கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here