பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

கல்வி படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

உதவித்தொகை

பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருடாவருடம் புது புது திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது குடும்ப வறுமை மற்றும் பல சிக்கல்கள் காரணமாக பல மாணவர்கள் தங்களது படிப்பை இடையிலே நிறுத்தி விடுகின்றனர். அந்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் கல்வியை தொடருவதற்காக, மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை மாநில மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கலாம்.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் நிதி உதவி.. முதல்வரின் அதிரடி திட்டம் - மக்கள் வரவேற்ப்பு!

இதன் மூலம் மாணவர்களின் வங்கி கணக்கில் ஒரு ஆண்டுக்கு உதவி தொகையாக ரூ. 12,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உதவித்தொகை பெறும் மாணவர்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000 கீழ் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த உதவித் தொகைக்கு இதுவரை பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்ப படிவம் இன்றுடன் முடிவடையும் என அறிவித்தனர். ஆனால் மத்திய அரசு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். எனவே கல்வி படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் விரைவில் இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here