மெர்சிடீஸ், போர்சே கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் டெஸ்லா!!

0

உலகில் மிக உயர்ந்த சொகுசு கார்களான மெர்சிடீஸ், போர்சே ஆகிய நிறுவனத்துக்கு போட்டியாக டெஸ்லா நிறுவனம் Model S Plaid என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ், போர்சே கார்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திவருகிறது. அதனால் பயன்படுத்துபவர்களுக்கு எளிதான, பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்படுகிறது. டிசைன், பாதுகாப்பு, நிலைத்தன்மை, புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மிகச்சிறப்பானதாக வடிவமைக்கப்படுவதால் கார் பிரியர்களுக்கு இந்த இரு நிறுவன கார்களின் மீது எப்போதும் தனி பிரியம் உண்டு.

தற்போது டெஸ்லா நிறுவனம் மெர்சிடீஸ், போர்சே ஆகிய கார்களுக்கு நிகராக Model S Plaid காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் உள்ள ஒரு தொழிற்சாலையில் Model S Plaid காரை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை டெஸ்லா நிறுனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தொடங்கி வைத்தார்.

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ தூரம் வரை பயணிக்கும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here