மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!

0
மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!
மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!

நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

அதிரடி உத்தரவு:

மக்களுக்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது அது மன நோயாக மாறுகிறது. இது ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த படலாம் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இதை உரிய முறையில் கவனிக்காமல் விடுவதாலும், தகுந்த சிகிச்சை அளிக்கப்படாததாலும் பல்வேறு இணை நோய்களுக்குக் காரணியாகவும், தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் அமைகிறது.

மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!
மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!

இது மட்டுமல்லாமல், விழிப்புணர்வு குறைவு, போதிய மருத்துவர்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் மன நோயாளிகளின் எண்ணிக்கை பத்து ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது கவனிக்க தகுந்தது. இது சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு முக்கிய அறிவுரை ஒன்றை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!
மனநல மருத்துவமனைகளை அதிகரியுங்கள் – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை!

அதாவது, 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 47 அரசு மனநல மருத்துவமனைகள் மட்டுமே உள்ளது. இது போதுமானதாக இல்லை. சமீபத்திய கொரோனா பொதுமுடக்கத்தால் பல மக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். இதை சரி செய்ய குறைந்த பட்சம் ஒவ்வொரு தாலுகாவிலும் மனநல சிகிச்சை மையம் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என தனது தீர்ப்பின் மூலம் இதை பரிந்துரை செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here