இறுதிப் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்…, ஆசிய கோப்பையை தட்டி செல்ல போவது யார்??

0
இறுதிப் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்..., ஆசிய கோப்பையை தட்டி செல்ல போவது யார்??
இறுதிப் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்..., ஆசிய கோப்பையை தட்டி செல்ல போவது யார்??

ஆடவருக்கான ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் சலாலா மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் போட்டியிட்டு விளையாடினார். இந்த லீக் சுற்றின் முடிவில் 2 குரூப்களிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன்படி, குரூப் A யில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், குரூப் B யில் மலேசியா, சவுத் கொரியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி சவுத் கொரியாவை எதிர்த்து போட்டியிட்டது. இதில், ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய தொடர்ந்து கோல்களை அடித்து அசத்தினார். இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் சவுத் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

பள்ளிகளுக்கு ஜூன் 13 ஆம் தேதி விடுமுறை., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இதே போன்ற மற்றொரு அரையிறுதி போட்டியில், மலேசியா அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதியது. சம பலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றிக்காக போராடினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 6-2 என்ற கோல் வித்தியத்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இந்த இரு அணிகளும் முன்னேறியதன் மூலம் உலக கோப்பை தொடருக்கான தகுதியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here