‘விஸ்வாசம்’ மியூசிக்கில் அப்படி என்ன தான் இருக்கு – இமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

2019ஆம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இசைக்காக இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இமானை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் இமான்

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறந்த இசைக்கான விருது ‘விஸ்வாசம்’ படத்தின் இசைக்கான தேசிய விருது இசையமைப்பாளர் இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்கள் பல வெளியானது. அதில் இயக்குனர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படம் தேசிய விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ‘அசுரன்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் பின்னியிருந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை. அனைவராலும் பாராட்டப்பட்ட 2019ஆம் ஆண்டின் சிறந்த இசையாக ஜி.வி.பிரகாஷின் ‘அசுரன்’ திரைப்படத்தின் இசை மக்களின் விருப்பமாக இருந்தது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்துக்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

கல்யாணத்துக்கு ரெடியான ஷெரின் – மாப்பிள்ளை யாரு தெரியுமா??

இதைக்கண்டு கொதித்த ஜி.வி.பிரகாஷ் ரசிகர்கள், விஸ்வாசம் படத்தில் அப்படி என்ன இசை இருக்கிறது, அசுரன் திரைப்படத்தை விட சிறந்த பின்னணி இசை என்ன இருக்க முடியும் என வலைதளங்களில் கேட்டு வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இமானை கலாய்த்து மீம்ஸ்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த மீம்ஸ்களை தற்போது பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here