ஹலோ  நான்  தகுதியான  குடும்பத்தலைவி பேசுறேன்.., அந்த ரூ.1000?? இணையத்தில்  ட்ரெண்டிங்காகும்  மீம்ஸ்!!

0
தமிழகத்தில் கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு அறிக்கைகளை தி,மு.க.வினர் தெரிவித்தனர். இதில் குடும்ப தலைவிக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை முக்கிய அறிக்கையாக பார்க்கப்பட்டது.
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இருந்தாலும் இத்திட்டம் குறித்து நீண்ட காலமாக வெளியாகாத நிலையில் 2023-24 நிதியாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனாலும் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் இவர்களின் பட்டியல் விரைவில் அரசாணை மூலம் தெரியப்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

கோல் மழை பொழிந்த ரொனால்டோவின் போர்ச்சுகல்…, சாம்பியன்ஸ் லீக்கின் தகுதி சுற்றில் 2வது வெற்றி!!

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் “அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் என்று கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு என தி.மு.க.வினர் அந்தர் பல்டி அடித்துள்ளனர். எதன் அடிப்படையில் இவர்களை தேர்ந்தெடுப்பிங்க.” என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் விளக்கத்தை வைத்து கலாய்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது இந்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here