“வேதாளம்” ரீமேக்கில் நடிக்க இதான் காரணம்.., உண்மையை உடைத்து பேசிய சிரஞ்சீவி!!

0
"வேதாளம்" ரீமேக்கில் நடிக்க இதான் காரணம்.., உண்மையை உடைத்து பேசிய சிரஞ்சீவி!!

இயக்குனர் சிவா படைப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேதாளம். அண்ணன் தங்கை செண்டிமெண்ட் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தங்கச்சி கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்திற்கு போலோ சங்கர் என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கச்சியாக கீர்த்தி சுரேஸும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது.

விசா கிடைக்காமல் தவித்த மணப்பெண்.., வீடியோ காலில் கல்யாணத்தை முடித்த மாப்பிள்ளை!!

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசியதாவது, என்னை எல்லாரும் ஏன் ரீமேக் படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஏன் ஒரு நல்ல கதையாக இருந்தால் ரீமேக் பண்ண கூடாதா என்ன? மேலும் வேதாளம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. அதனால் தான் இந்த படத்தில் நடித்தேன். அதுமட்டுமின்றி இந்த போலோ சங்கர் திரைப்படம் அனைவரையும் குஷிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here