ஆஸ்திரேலிய மகளிர் அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மெக் லானிங். தற்போது இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மெக் லானிங் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2010ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமானார்.
மேலும் இவர் 6 டெஸ்டில் 345 ரன்கள் , ODIகளில் 4,602 ரன்கள் மற்றும் T20 போட்டிகளில் 3,405 ரன்களை குவித்து உள்ளார். லானிங் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். மெக் லானிங் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS 2023: கடைசி போட்டி இடம் மாற்றமா? வெளியான முக்கிய தகவல்!!
சர்வதேச கிரிக்கெட்டில் மெக் லானிங்:
- 8,352 சர்வதேச ரன்கள்
- 53.6 ODI சராசரி
- 17 சர்வதேச சதங்கள்
- கேப்டனாக 4 T20 உலகக் கோப்பைகளை வென்றார்
- கேப்டனாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றார்
- 7 உலகக் கோப்பைகளை வென்றார்
- கேப்டனாக CWG தங்கம் வென்றார்
- கேப்டனாக 179 போட்டிகளில் 146 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்