Wednesday, March 27, 2024

ரஷ்யாவிடம் இருந்து தடுப்பு மருந்து வாங்கப்படுமா?? – இன்று டெல்லியில் உயர்நிலை குழு ஆலோசனை!!

Must Read

ரஷ்யா தனது முதல் கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததை அடுத்து இந்தியா உட்பட பல நாடுகள் அந்த மருந்தினை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த மருந்தினை வாங்கலாமா என்று இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

புதிய மருந்து:

கடந்த சில நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது, கொரோனா என்னும் நோய் கிருமி தான். இந்த நோய் தொற்று காரணமாக உலகத்தில் தற்போது வரை 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பரவலை தடுக்க எல்லா நாடுகளும் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் போட்டி போட்டு வந்தன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

corona vaccine
corona vaccine

அனைவரும் எதிர்பார்த்தது, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தான் முதலில் மருந்தினை கண்டுபிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று ரஷ்யா அரசு அதிகாரப்பூர்வமான தடுப்பு மருந்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டது. இந்த மருந்தினை மக்கள் அனைவர்க்கும் கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் 3 கோடி டோஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

மற்ற நாடுகள் ஆர்வம்:

இந்த நிலையில், மற்ற நாடுகள் ஆன இந்தியா, அரபு நாடுகள், இந்தோனேஷியா உட்பட 20 நாடுகள் ரஷ்யா நாட்டிடம் இருந்து இந்த தடுப்பு மருந்தினை வாங்க போட்டி போட்டு வருகின்றது. இந்த தடுப்பு மருந்து நல்ல பலன்களை அளித்தால் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்குவது போல் பெரிய அளவில் தடுப்பு மருந்துகளை தயாரிக்க ரஷ்யா அரசு திட்டமிட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்:

இந்த நிலையில், இந்த மருந்தினை வாங்க நமது நாடும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு ஒன்றை மத்திய அரசு உருவாகியுள்ளது. இந்த குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது அரசு.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு மருந்துகள் , அவற்றை வாங்குவது குறித்தும், இந்த அலையோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ரஷ்யா அறிவித்துள்ள இந்த மருந்து குறித்தும், கூட்டத்தில் விவாதிக்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -