ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 11 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 11 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு!!
ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 11 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு!!

நாட்டின் புகழ் பெற்ற தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், அவர்களுக்கு 11 நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறை :

இந்தியாவில் உள்ள பல புகழ் பெற்ற தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கான சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பணி உயர்வு மற்றும் விடுமுறை குறித்த அதிரடி சர்ப்ரைஸுகளை தொடர்ந்து கணக்கில்லாமல் வாரி இறைத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, நாட்டின் புகழ் பெற்ற தனியார் ஆன்லைன் விற்பனை தளமான Meesho நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பணிச்சுமை காரணமாக தங்கள் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைப்பதற்காக வருகிற அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 11 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஜனார்த்தனன் போட்ட திட்டத்தால் சீரழியும் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!

இந்த விடுமுறைக்கு பின் ஊழியர்கள் புத்துணர்ச்சியுடன் பணி செய்வார்கள் என்றும், அவர்களுக்கு இது ஒரு சிறந்த இடைவெளியை கொடுக்கும் என்றும் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன் ஒரு நிறுவனம், ஊழியர்கள் money heaist படத்திற்கு செல்ல விடுமுறை வழங்கி இருந்தது பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனம் வழங்கியுள்ள, இந்த தொடர் விடுமுறை தங்களுக்கு எப்போது வரும்? என்ற ஏக்கத்தில் மற்ற நிறுவன ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here