ஓவர் டார்ச்சர் செய்கிறார்… இதற்கு தற்கொலை ஒன்றே தீர்வு… பிரதமரை டேக் செய்த சூப்பர் மாடல் மீரா மிதுன்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியால் தங்களின் திறமை மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர்கள் பலர். மேலும் அந்த நிகழ்ச்சி மூலம்  தங்களின் பெயர்களை நிலைநிறுத்தி கொண்டவர்களும் உண்டு. ஆனால் எங்கும் சர்ச்சை எதிலும் சர்ச்சை என்று இருக்கும் மீரா மிதுன் பிக் பாஸ் நுழைந்து அங்கும் தனது சர்ச்சையால் மக்களுக்கு பிரபலமாக அறிமுகம் ஆனார். தற்போது அவர் தனது ட்விட்டர் பதிவில் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். மேலும் இந்த பதிவை முதலமைச்சர் மற்றும் பிரதமரை டேக் செய்த உள்ளார் மீரா மிதுன்.

ஒரு மாடலாக தனது பயணத்தை தொடங்கியவர் மீரா மிதுன். சினிமாவில் ஒரு சில கதாப்பாத்திரங்களிலும் நடித்து உள்ளார். பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு முன்பே விஜய் டிவியின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னு சீசன்-8 ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டு உள்ளார். அவர் பிக் பாஸ் நுழைந்த நாள் முதலே அங்கு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருந்தது. சக போட்டியாளர்களுடன் சண்டை,சர்ச்சை பேச்சு என தொடர்ந்த அவர் பயணம் 35 வது நாள் அவரை வெளியேற்ற, முடிவுக்கு வந்தது.

தற்போது அவர், முன்பு வேலை பார்த்த அஜித் ரவி என்பவரின் நிறுவனம், தன்னை வளரவிடாமல் தடுப்பதாகவும், 3  ஆண்டுகளுக்கு மேலாக தன்னை  பின் தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் வேலை பார்த்து , அழகிப் பட்டம் வென்றேன். அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன். அஜித் ரவி என் பெயரை கெடுத்து விட்டார். என் மீது போலி வழக்குகள் தொடர்ந்தார். சைபர் புல்லியிங் செய்தார். தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்தார். அவர் என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

மேலும் இதற்கென பல ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்,இதற்கு தற்கொலை ஒன்றே முடிவு. அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும்  “இது தற்கொலை அல்ல ,அவர் செய்யும் கொலை”. என்னுடைய இந்த முடிவுக்கு அவர் தான் காரணம் என பதிவிட்டு, மேலும்முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் டேக் செய்து உள்ளார். இது தற்போது சர்ச்சையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here