சிஎம் ஆகுறது தான் என் லட்சியம்.., ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கல.., மீண்டும் உருட்டை ஆரம்பித்த மீரா மிதுன்!!

0

சர்ச்சை ராணியான மீரா மிதுன் இப்பொழுது தான் ஜெயிலுக்கு சென்று வந்த நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதமாக தனது நீண்ட நாள் ஆசையை கூறியுள்ளார். இதனை கேட்ட பலரும் கடுப்பில் உள்ளனர்.

மீரா மிதுன்

மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலம் பிரபலமனார். பிக் பாஸ் வீட்டில் இருந்தே அவரது பேச்சும் நடவடிக்கையும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இவருக்கும் சேரனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பல பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த மீரா மிதுன் விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் தனது வளர்ச்சியை பார்த்து பொறாமை படுவதாகவும், தனக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்று பல சதி வேலைகளை பார்ப்பதாகவும் கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்னாள் குறிப்பிட்ட சாதியினரை இழிவாக பேசி ஜெயிலுக்கு சென்று வந்தார். இப்படி இருக்க தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள மீரா மிதுன் தனக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாகவும், அவர்களை சந்திக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

meera mithun
meera mithun

இதனை கேட்டே பலரும் கடுப்பாகியுள்ள நிலையில் தற்போது தனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை என்று வாய் கூசாமல் பேட்டியளித்துள்ளார். ஏற்கனவே காண்டில் இருந்த பலரும் இப்பொழுது வெகுண்டெழுந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here