மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் நீக்க தேவையில்லை .., சென்னை ஐகோர்ட் உத்தரவு!!

0
மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் நீக்க தேவையில்லை .., சென்னை ஐகோர்ட் உத்தரவு!!
மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் நீக்க தேவையில்லை .., சென்னை ஐகோர்ட் உத்தரவு!!

உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் முக்கியமான ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலை சுற்றி பார்க்க வெளி நாட்டவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் புகைப்படத்தை பார்த்து தான் சமீபத்தில் கோவிலுக்குள்ளே செல்லும் போது செல்போன், கேமரா உள்ளிட்ட பொருட்களை கொண்டு போக தடை விதிக்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இருப்பினும் ஒரு சில தனியார் நிறுவனங்களை மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்கள், சிலைகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் முத்திரையுடன் முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து மதுரை புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தார்.

தமிழக மக்களே., அரசு விரைவு போக்குவரத்தின் அட்டகாசமான சேவை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக கோவிலுக்குள் புகைப்படம், வீடியோ எடுக்க ஒப்பந்தம் பேசப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here