தடுப்பூசி கொள்கையை விமர்சிக்கும் ஊடகங்கள் !!!: – மத்திய அரசின் பதிலடி !!…

0

ஊடகங்கள் தடுப்பூசி பற்றிய  ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கொண்டு சில ஊடகங்கள் தடுப்பூசி கொள்கையை விமர்சிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனிடையில் ஜூன் மாதம் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்படும் என்று தெரிவித்து இருந்த மத்திய அரசு மே மாதத்தின் மொத்த இருப்பில் 7.96 கோடியில் 5.8 கோடி டோஸ்கள் மட்டுமே செலுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.நேற்றைய நிலவரப்படி இதுவரை 22 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை தொட்டு உள்ளது. மேலும் அரசு கூறியதாவது ,தடுப்பூசி செலுத்துவதில் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு முன்னுரிமை அளித்தல்,கொள்முதல் தேர்வு,அதன் விநியோகம், உள்ளிட்ட அனைத்தையும் வழிநடத்த,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

முன்னுரிமை அளிக்கப்பட்ட வரிசையில் மருத்துவர்கள் ,முன் களப்பணியாளர்கள் போன்றோர் அடங்குவர்.இந்த அணுகுமுறையால் 84 சதவீதத்துக்கும் மேலான முன் களப்பணியாளர்கள் முதல் தவணை டோஸ்களை செலுத்திக்கொண்டு உள்ளனர். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இந்திய அரசு ஒவ்வொரு மாதமும் 50 சதவீதம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது.தற்போது எஞ்சியுள்ள 50% டோஸ்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்து உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here