‘குழந்தைகள் இறைச்சி சாப்பிட்டால் ஆஸ்துமா ஏற்படும்’ – அமெரிக்கா ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்!!

0

அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஓர் அதிர்ச்சியான தகவல்களை வெளியீட்டியுள்ளார். அவர் கூறியதாவது குழந்தைகள் அதிகமாக இறைச்சி சாப்பிட்டால் அவர்களுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் மக்கள் அனைவரையும் அதிரவைத்துள்ளது.

உணவு வழக்கம்:

தற்போதைய காலத்தில் மக்கள் யாரும் சத்தான உணவை சாப்பிடுவதில்லை. இதனால் சிறு வயதிலே வரக்கூடாத நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து’ என்று கூறிவந்தார்கள் ஆனால் தற்போதைய நிலைமை என்ன வென்றால் ‘மருந்தே உணவு’ என்னும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

அதற்கு ஓர் முக்கிய காரணம் பாஸ்ட் புட். இன்றைய காலத்தில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை கண்டாலே பிடிப்பதில்லை. என்னதான் காலங்கள் மின்னணுமயமாக்கப்பட்டாலும் நம் உணவு முறையை நம் முன்னோர்கள் பின் பற்றியது போல் நாம் பின்பற்றினால் மட்டுமே நாம் நீண்ட ஆயுளோடு இருக்க முடியும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்கா ஆய்வாளர்:

தற்போது உணவு பழக்கவழக்கங்களை குறித்து அமெரிக்கா ஆய்வாளர் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட அறிக்கை அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது சிறு வயதில் இருந்தே இறைச்சி சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் என்று கூறியுள்ளார். தற்போதைய காலங்களில் குழந்தைகளின் பெற்றோரே அசைவ சாப்பாட்டை குடுத்து வளர்க்கின்றனர். அதை விட சைவ முறை சிறந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!!

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் நிறைய குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டு வருகிறது. இதற்கு உணவு பழக்கவழக்கங்கள் காரணமோ என்று ஆராய்ந்து பார்த்த போது தான் தெரிகிறது, குழந்தைகள் இறைச்சி சாப்பிட்டால் ஆஸ்த்துமா ஏற்படும் என்று. 2003-2006 வரை தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கணக்கெடுப்பில் 2 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 4,388 குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது, இறைச்சியால் தான் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here