குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ரெசிபி – டேஸ்டியான “மீல் மேக்கர் கட்லெட்”!!

0

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் டேஸ்டியாகவும் அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று உடலுக்கு இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியினை வழங்கும் மீல் மேக்கர் வைத்து “மீல் மேக்கர் கட்லெட்” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 5 பல்
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் – 1 (பொடியாக நறுக்கியது)
  • மீல் மேக்கர் – 1 கப்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • மசித்த உருளைக்கிழங்கு – 2
  • கொத்தமல்லி தழை – தேவையான அளவு
  • பிரட் தூள் – 3 டீஸ்பூன்

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்து கொள்ள வேண்டும். அதில் சூடு தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். இதனால் மீல் மேக்கர் கொஞ்சம் பெரிதாகி விடும். பின், தண்ணீரை வடிகட்டி விட்டு அதனை மிஸ்ஸில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு காடையில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பூண்டு, மீல் மேக்கர், காரட், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

‘மிஸ்டர் & மிஸர்ஸ் சின்னத்திரையில் அர்ச்சனாவை கூப்பிடாதீங்க, காண்டாகுது’ – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

பின், இதில் உருளைக்கிழங்கு மற்றும் கொத்தமல்லி தழை சேர்ந்து நன்றாக ஒரு முறை கிண்டி விட்டு இறக்கி விடவும். இந்த கலவை சிறிது ஆறியதும், அதனை சிறு சிறு உருண்டைக்கைகளாகவோ அல்லது தட்டையாகவோ பிடித்து கொள்ள வேண்டும். பின், இதனை பிரட் துகள்களில் பிரட்டி எடுத்து அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்ளோ தான்!!!

டேஸ்டியான “மீல் மேக்கர் கட்லெட்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here