புரட்டாசி வரப்போதா?? அசைவப்பிரியர்களே கவலை வேண்டாம்… அசைவ சுவையில் சைவ சிக்கன் 65 செஞ்சு பாருங்க!!!

0

அசைவ விரும்பிகளுக்கு நாம் சாப்பிடும் உணவில் ஏதாவது ஒன்றிலாவது அசைவம் போன்ற மனம் அல்லது சுவையை எதிர்பார்ப்பர். மேலும் தமிழ் முறை படி ஒரு சில மாதங்கள் நம்மில் பலர் அசைவ உணவுகளை தவிர்ப்போம். அப்படிப்பட்ட ஒரு மாதம் தான் புரட்டாசி. இந்த மாதங்களில் அசைவ பிரியர்களுக்காக அந்த சுவை தரக்கூடிய பல உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மீல் மேக்கர். நாம் இந்த பதிவில் சைவ சிக்கன் 65 அதாவது மீல் மேக்கர் 65 எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்

மீல்மேக்கர் – 100 கிராம்

இஞ்சி பூண்டு  விழுது – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

சீரக தூள் – 1/2 தேக்கரண்டி

அரிசி மாவு – 2 தேக்கரண்டி

கடலை மாவு – 2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

முதலில் நன்கு கொதிக்க வைத்து உள்ள சுடு தண்ணீரில் மீல்மேக்கரை சேர்த்து 10லிருந்து 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் ஊற வைத்து உள்ள மீல்மேக்கரை பிழிந்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா தூள், சீரக தூள், அரிசி மாவு,கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்து மீல்மேக்கர் மீதும் படுமாறு கிளறி கொள்ள வேண்டும்.

இதையடுத்து இந்த கலவையை 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மீல்மேக்கரை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு மீல்மேக்கர் பொறித்த எண்ணெய்யில் கருவேப்பிலைகளை போட்டு பொரித்து அதை ஏற்கனவே வறுத்து வைத்து உள்ள மீல்மேக்கர் மீது போட்டு, அதை பரிமாறவும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here