மயிலாடுதுறையில் வெறித்தனமான மழை.,, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க உத்தரவு!!

0
மயிலாடுதுறையில் வெறித்தனமான மழை.,, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க உத்தரவு!!
மயிலாடுதுறையில் வெறித்தனமான மழை.,, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க உத்தரவு!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

நிவாரணம்:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்தது. இதனால் சீர்காழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல பகுதிகள் தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விட்டது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மரங்களை அப்புறப்படுத்தும் பணியும்,வெள்ள நீரை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ரொனால்டோ அணிக்கு ஸ்பான்சரான இந்தியாவின் பிரபல நிறுவனம்…, வெளியாகிய தகவல்!!

அதாவது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும். மேலும் கனமழையால் சேதமடைந்த பயிர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here