ரஞ்சி டிராபியிலும் தொடர்ந்த இரட்டை சதம்…, அதிரடி காட்டும் இளம் வீரர்கள்!!

0
ரஞ்சி டிராபியிலும் தொடர்ந்த இரட்டை சதம்..., அதிரடி காட்டும் இளம் வீரர்கள்!!
ரஞ்சி டிராபியிலும் தொடர்ந்த இரட்டை சதம்..., அதிரடி காட்டும் இளம் வீரர்கள்!!

ரஞ்சி டிராபி தொடரில், கேரளா அணிக்கு எதிராக கர்நாடகா அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ரஞ்சி டிராபி:

ரஞ்சி டிராபி தொடரானது இந்தியாவில் கடந்த மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல இளம் வீரர்கள் இந்த தொடரில், தொடர்ந்து சதங்களை அடித்து சாதனை படைத்து வருகின்றனர். இந்த வகையில், கேரளா அணியை எதிர்த்து கர்நாடகா அணி மோதியது. இதில், டாஸ் வென்ற கேரள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கேரள அணி, 342 ரன்களுக்குள் சுருண்டது. இதில், அதிகபட்சமாக சச்சின் பேபி 141 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, களமிறங்கிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர் ரவிக்குமார் வந்த வேகத்தில் வெளியேறினார்.

சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!

இதனால், அதிரடி காட்ட தொடங்கிய அணியின் கேப்டன், மயங்க் அகர்வால் 17 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 208 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். இவர் எதிர்வரும் ஐபிஎல் சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான், நியூசிலாந்து அணிக்கு எதிராக சுப்மன் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here