3வது முறையாக முதல்வராகிறார் மம்தா பானர்ஜி – மே 5ல் பதவி ஏற்பு!!

0

தமிழகம், புதுவை, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டபேரவை தேர்தலின் முடிவு நேற்று வெளியானது. அதில் தனி பெரும்பான்மையை பெற்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.

மம்தா பானர்ஜி:

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வர இருந்த நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது. மேலும் இந்த ஐந்து மாநிலத்தில் பல கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது. அதன்படி மேற்கு வங்க தொகுதியில் சுமார் 8 கட்டமாக தேர்தலை நடத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதற்கான முடிவுகள் நேற்று வெளியானது. அதில் அதிக பெரும்பான்மையை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைபிடித்தது. மேலும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான மம்தா பானர்ஜி 3வது முறையாக தற்போது முதல்வர் பதவியை ஏற்கவுள்ளார்.

ரம்யா பாண்டியன் ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைக்காக அனுமதி – சோகத்தில் ரசிகர்கள்!!

ஆனால் இவரது கட்சி பெரும்பான்மையை பெற்றிருந்தாலும் மம்தா பானர்ஜி களமிட்ட தொகுதியில் தொடக்கத்தில் ஆதிக்கத்தை செலுத்தி இறுதியில் தோல்வியை தழுவினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது 3வது முறையாக முதல்வராகவும் மம்தா பானர்ஜி வருகிற மே மாத 5ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். மேலும் இவர் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இவர் மேற்குவங்க ஆளுநரை இன்றிரவு 7 மணிக்கு சந்தித்து உரிமை கோரவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here