Saturday, May 15, 2021

தமிழகத்தில் மே 1,2 முழு ஊரடங்கு?? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!

Must Read

தமிழகத்தில் வருகிற மே மாதம் 2ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஊரடங்கு

தமிழகத்தில் வருகிற மே மாதம் ஆயுட் காலம் முடிவுக்கு வரவுள்ளது இதனால் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கை மேற்கொள்ள சென்னை நீதிமன்றம் பரிந்துரை செய்தது. தற்போது இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

தடுப்பூசி குறித்த சர்ச்சை பேச்சு – நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்!!

அதன்படி அவர் கூறியதாவது, வாக்கு எண்ணிக்கை குறித்த அனைத்து தகவல்களையும் அரசிடம் அளித்துள்ளோம். வாக்கு சாவடிகளில் மேசைகளின் எண்ணிக்கை வாக்குச்சாவடி மற்றும் அதிகாரிகள் பொறுத்து அமையும் என்றும் வாக்கு சாவடிகளுக்கு வரும் அனைவருக்கும் 92.6 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தால் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஊரடங்கு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -