அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே – ரசிகர்கள் ஷாக்!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே - ரசிகர்கள் ஷாக்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே - ரசிகர்கள் ஷாக்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டினி!

இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான சுற்று நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் நம்பர் 1 பிரிட்டனைச் சேர்ந்த வீரர் ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினியை எதிர்கொண்டார்.

இந்த இருவருக்கும் இடையில் நடந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே கடும் வீழ்ச்சியை சந்தித்தார். இந்த இரண்டு செட்டின் மூலம் போட்டி முடிவுக்கு வர தொடங்கியது. ஆனாலும் கடைசி வரை விடா முயற்சியுடன் போராடிய முர்ரே கடைசி செட்டை தனதாக்கிக்கொண்டார். இதன் மூலம் இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here