இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? – காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

0
இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? - காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? - காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா என்ற பகுதியில் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொள்ளும் கோத்மார் எனும் வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது.

வினோத திருவிழா:

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் ஜாம் ஆற்றின் அருகே “கோத்மார்” என்ற பெயரில் இந்த திருவிழா சுமார் 400 ஆண்டுகளாக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில் பந்துர்ணா மற்றும் சவர்கான் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆற்றின் இருபுறமும் நின்று கொண்டு இந்த வினோத திருவிழாவில் வினோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல் பார்க்க கூடிய பொதுமக்களை முகம் சுளிக்கவும், ஆச்சரியப்படவும் வைத்துள்ளது.

இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? - காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? – காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! 

அதாவது, இரு கிராமத்தினர் வந்ததும் ஆற்றின் நடுவே ஒரு கொடி வைக்கப்படுமாம். இந்த கொடியை எந்த கிராமத்தினர் கையில் எடுக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இந்த கொடியை அவ்வளவு சாதாரணமாக மக்கள் கைப்பற்றி விட முடியாத படி கிராம மக்கள் ஒருவரை ஒருவர் ஆற்றின் இரு கரை பகுதிகளில் நின்று தாக்கி கொள்வார்கள்.

இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? - காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இப்படியெல்லாமா திருவிழா கொண்டாடுவீங்க? – காயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

இந்த வினோத திருவிழாவில், இரு கிராமத்தை சார்ந்த 400 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த பந்தங்கள் ஒருவரையொருவர் பார்த்து நலம் விசாரிக்க தொடங்கப்பட்ட திருவிழாக்கள் இப்படி கலவர பூமியாக மாறுவதை நினைத்து பொதுமக்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here