கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.5000 – மாநில அரசு அறிவிப்பு!!

0

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை பெரிதும் பாதித்து நிலையில் மத்திய பிரதேச முதல்வர் கொரோனா உயிரிழந்தவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார்.

கொரோனா

கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கில் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. மேலும் நிவாரண நிதிகளையும் வழங்கி வருகிறது.

இந்த கொரோனாவில் இருந்து நாடு எப்பொழுது மீண்டு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக இருந்து வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடுகளை தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்த கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும், மேலும் அவர்களின் படிப்பு சம்மந்தமான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here