‘மாஸ்டர் பட சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க தயார்’ – அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!!

0

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து தளபதியாக ரசிகர்கள் மனதில் நிலைத்து இருப்பவர் விஜய். இவரின் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படம்:

தமிழ்நாட்டில் இளைய தளபதி என்றாலே ஒரே ஆரவாரம் தான். எப்பொழுது விஜய் படம் வரும் என்று காத்திருப்பவர்களே அதிகம். மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே டாப் ஹிட் என்றே சொல்லலாம். இந்நிலையில் அவரது 64 வது படமான மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரப்போகிறது என்று காத்துக்கொண்டுள்ளனர். இந்த வருடம் ஜூன் மாதத்திலேயே இந்த படம் வரவேண்டியது. மார்ச் மாதம் கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கொரோனா காரணமாக லாக்டவுன் போடப்பட்ட நிலையில் திரையரங்குகள் யாவும் மூடப்பட்டன. அதனால் மாஸ்டர் திரைப்படமும் நிலுவையில் உள்ளது. இந்த படம் எப்பொழுது வெளியாகும் என்றே காத்துக்கொண்டுள்ளனர். இப்பொழுது திரையரங்கில் வெளியிட்டால் கொரோனா காரணமாகி படத்திற்கு வசூல் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை”

மேலும் இந்த படம் ஓடிடியில் வெளியிடப் போவதாகவும் வதந்திகள் வெளியாகின. ஆனால் இதனை திரையரங்கில் மட்டும் தான் வெளியிடப்போவதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள 80% திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. அவர்களும் இதற்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.

kadambur raju
kadambur raju

விஜயும் விஜய் சேதுபதியும் முதன்முதலில் இணைந்து நடித்துள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என்று கேட்டதற்கு படக்குழுவினர் கேட்டால் அரசு பரிசீலித்து அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here