மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட் – படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!!

0

தமிழில் லாக்டவுன் காரணமாக நிலுவையில் இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் தொடர்ந்து வந்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகியுள்ளது என்ற தகவல் நாளை காலை 12.30 மணிக்கு வெளியாக உள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று ட்விட்டரில் XB பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம்

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகர் என்றால் அது விஜய் தான். வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் இவர் படம் எப்பொழுது வெளி வரும் என்று தவம் கிடப்பவர்களே அதிகம். கடந்த வருடம் வெளியான பிகில் திரைப்படமும் மாஸான வசூலை பெற்றது. அதன் பிறகு அவர் நடித்த படமே மாஸ்டர் திரைப்படம். மார்ச் மாதத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

master-movie-review-
master-movie-review-

மேலும் மாளவிகா மோகனன் முதமுதலாக விஜய் உடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தின் அதிக எதிர்பார்ப்பு என்னவென்றால் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிப்பதே. இந்த படத்தின் டீஸர் நவம்பர் மாதத்தில் வெளியானது. அந்த டீஸர் இணையத்தையே கலக்கியது என்றே சொல்லலாம்.

இந்த படம் எப்பொழுது திரையரங்கில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்குகள் சங்கத்தலைவர் ஜனவரி 13 இல் படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

தற்போது மாஸ்டர் படத்தை தயாரிக்கும் நிறுவனமாகிய XB பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் அப்டேட் நாளை காலை 12.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது ட்ரைலரா அல்லது படத்தின் புதிய அப்டேட்டா என்பது தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here