வெளியாகி இவ்வளவு மாதங்கள் கழித்தும் மாஸ்டர் படைத்த புதிய சாதனை.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!

0
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் சர்ச்சை - நடிகை வெளியிட்ட பதிவு!!!
இரவின் நிழல் படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்த மாஸ்டர் பட நடிகை - நடிகர் பார்த்திபன் ஷாக் நியூஸ்!!
தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் மாஸான படங்களை தருவதில் தளபதி விஜய்க்கு முக்கிய இடமுண்டு. அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியான படம் தான் மாஸ்டர்.
கொரோனா தொற்று பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கில் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால் திண்டாடிய பட தயாரிப்பாளர்கள் OTT தளங்களின் உதவியால் அந்த படங்களை விற்று லாபம் பார்த்தனர். பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சில வாரங்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்டது.
அப்படிப்பட்ட சூழலில் சென்ற பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். ரசிகர்களின் ஆதரவை பெற்று இப்படம் நன்றாகவே ஓடியது. தற்போது வெளியாகி இவ்வளவு மாதங்கள் கழித்தும் தற்போது இந்த படம் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களில் மாஸ்டர் 45வது இடத்தை பிடித்துள்ளது.
அதோடு இந்தியாவில் விஜயின் மாஸ்டர் படம் தான் அதிக வசூல் செய்துள்ள படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here