செவ்வாய் கோளில் முக்கிய தடயம் – நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!

0
செவ்வாய் கோளில் முக்கிய தடயம் - நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
செவ்வாய் கோளில் முக்கிய தடயம் - நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!

செவ்வாய் கோளில் தண்ணீர் இருந்ததற்கான படிம ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற யூகம் மேலும் உறுதியாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

முக்கிய தகவல்:

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் செவ்வாய் கோளில் உள்ள ஒட்டுமொத்த கூறுகளையும் ஆராய்வதாற்காக அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த விண்கலம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் அடியெடுத்து வைத்தது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த பெர்சவரன்ஸ் ரோவர் கருவி செவ்வாயில் பத்திரமாக தரை இறங்கியது.

செவ்வாய் கோளில் முக்கிய தடயம் - நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
செவ்வாய் கோளில் முக்கிய தடயம் – நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இதனை அடுத்து, செவ்வாய் கோளின் முக்கிய பகுதிகளையும், அங்குள்ள பாறைகளையும் இந்த செயற்கை கோள் ஆய்வு செய்ய உள்ளதாக நாசா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோளின் பாறைகளை உடைத்து ஆய்வு செய்யும் முயற்சி நாங்கள் திட்டமிட்டபடி நடக்க வில்லை என தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்றை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

செவ்வாய் கோளில் முக்கிய தடயம் - நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
செவ்வாய் கோளில் முக்கிய தடயம் – நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!

அதாவது, தற்போது இந்த செயற்கை கோள் அனுப்பியுள்ள புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீர் ஆதாரத் தடயத்தின் மூலம், இந்த கோளில் உயிரினங்கள் வாழ்திருக்கலாம் என்ற யூகம் மேலும் வலுவடைந்து உறுதியாகி இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here