இந்த 4 ராசிக்கு இந்த வருஷம் காதல் கல்யாணம் கன்பார்ம்.., உங்களுக்கான ராசிபலன் உள்ளே!!

0
இந்த 4 ராசிக்கு இந்த வருஷம் காதல் கல்யாணம் கன்பார்ம்.., உங்களுக்கான ராசிபலன் உள்ளே!!
இந்த 4 ராசிக்கு இந்த வருஷம் காதல் கல்யாணம் கன்பார்ம்.., உங்களுக்கான ராசிபலன் உள்ளே!!

இந்த 2k காலகட்டத்தில் என்ன தான் உலகம் மாறி இருந்தாலும் சில பழமையான விஷயங்கள் பலவும் இன்னும் பின்பற்றப்பட்டு தான் வருகிறது. அதில் ஒன்று தான் ஜாதகம். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அதில் ஜாதகம் பார்த்து தான் அடுத்த வேளைகள் இறங்கும் பழக்கம் அனைவருக்குமே உள்ளது. கல்யாணம் முதல், வீடு கட்டுவது வரை ஜாதகம் என்ற ஒன்று தான் புகுந்து விளையாடும். இப்படி இருக்க இப்பொழுது 2023 ஆம் ஆண்டு திருமணம் நடக்க போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இந்த வருடத்தில் குரு உங்கள் ராசியில் நுழைவதால், கண்டிப்பாக இந்த வருடம் உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதலித்தவர்களுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும். மேலும் இந்த வருடம் உங்களுக்கு, வெற்றிகரமாகவே அமையும். முரட்டு சிங்கிளாக இருப்பவர்கள் கூட கமிட்டாக அதிக வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, காதலும் இல்லை, கல்யாணமும் நடக்கலைனு கவலை பட்டுக்கிட்ட இருந்த உங்களுக்கு இந்த வருஷம் விடிவு காலம் தான். காதலே உங்களை தேடி வரும் நாள் வந்தாச்சு. திருமண தடை நீங்கி உங்களுக்கு அருமையான வாழ்க்கை துணை அமைய அனைத்து சாத்தியக்கூறுகளும் வந்து விட்டது. குரு பகவான் வலுமையான இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கை துணை உங்களுக்கு பிடித்தது போலவே அமையும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு இந்த வரும் அமோகமான காலம் என்றே சொல்லலாம். நீண்ட நாடளாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கூடி வரும். மேலும் குரு 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமண தடை அகலும். அதுமட்டுமின்றி வியாழக்கிழமைகளில் தொடர்ந்து குரு பகவானை தரிசித்து வர நல்ல குணமுடைய வாழ்க்கை துணை அமையும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு குருவின் பார்வை 7,9,வீடுகளில் படுவதால் திருமண யோகம் உண்டாகும். காதலை வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமாக நேரம் என்றே சொல்லலாம். ஏனெனில் குருவின் பார்வை அந்த அளவிற்கு உள்ளதால் பிரச்சனையே இல்லாமல் சுமூகமாக உங்களது காதல் திருமணம் நடைபெறும். மேலும் திருமணமானவர்களுக்கு அதிக பிணைப்பு இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here