ஒருவருக்கு எந்த வயதில் திருமணம் நடந்தால் நல்லது?? ஆன்மீக விளக்கம்!!

0
wedding
wedding

அந்த காலத்தில் குழந்தை திருமணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. ஒரு பெண் பருவ வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்து வைத்து விடுவர். ஆனால் தற்போது பல சட்ட திருத்தங்கள் மூலம் அதனை தடை செய்துள்ளனர். தற்போது ஒருவருக்கு சரியான திருமண வயது எப்பொழுது என்பதை பார்ப்போம்.

திருமண வயது

ஒருவரின் ஜாதகத்தில் அவர்களின் திருமணம் 7 மற்றும் 8ம் இடத்தை குறிக்கும். அந்த 7 மற்றும் 8 ஆம் இடம் வலுவாக இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு விரைவில் திருமணம் நடக்கும். மேலும் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது.

marriage
marriage

காலத்திரக்காரனான சுக்கிரனின் நிலையை வைத்தே அவர்களின் திருமண வாழ்க்கையும் அமையும். மேலும் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு திருமணத்தில் பல தடைகளும் ஏற்படுகிறது. இந்த காலத்தில் செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் என்பது அரிதான ஒன்று.

marriage
marriage

எனவே இந்த செவ்வாய் தோஷம் இப்பொழுது பெரிய பிரச்சனையாக அமையாது. ஆனால் சுக்ரன் ஒருவரின் ஜாதகத்தில் பகை வீட்டிலோ, மறைவிடத்திலோ, நீசமடைந்தாலோ அல்லது 8 ஆம் இடத்தில் இருந்தாலோ அவர்களுக்கு திருமணத்தில் பிரச்சனைகள் வர கூடும். எனவே தான் திருமணத்தில் தாமதமாகிறது.

marriage
marriage

ஜோதிட ஆலோசகரை கேட்டு தகுந்த முறையில் பரிகாரங்களை மேற்கொண்டால் ஓரளவிற்கு அனுகூலம் கிட்டும். ஆனால் சராசரியாக ஒரு பெண்ணோ அல்லது ஆணோ எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்க்கும்போது 23 லிருந்து 26 வரை திருமணம் செய்து கொள்ளலாம்.

wedding-ceremony
wedding-ceremony

பலர் திருமணம் என்றாலே பயப்படுவது உண்டு. காரணம் சுதந்திரம் பறிபோய் விடுமோ என்பது தான். ஆனால் எப்படியும் திருமணம் செய்து ஆக வேண்டும் தானே. 25 வயதில் நமக்கு நல்ல அனுபவமும், பொறுப்புணர்வும் இருக்கும். இதனால் வாழ்க்கையை திட்டமிட்டு வாழ முடியும்.

wedding-ceremony
wedding-ceremony

மேலும் 18 வயதில் திருமணம் செய்வதால் எந்த குடும்பத்தை நடத்தும் அளவிற்கு  அவர்களுக்கு பொறுப்பு இருக்காது. அந்த அளவிற்கு அவர்களுக்கு பக்குவமும் வளர்ந்திருக்காது. இது வாழ்க்கையை பாதிக்கும் ஒரு விஷயமாக கூட அமையலாம். எனவே ஆண் மற்றும் பெண்ணிற்கான திருமண வயது சராசரியாக 25 என கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here