திருமணத்தில் 10 பொருத்தம் பார்ப்பது எதற்கு தெரியுமா?? வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

0
marriage
marriage

திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்ப்பது நமது வழக்கம். இந்த பொருத்தங்கள் எதற்கு பார்க்கப்படுகிறது தெரியுமா?? இந்த பொருத்தம் தம்பதியர்கள் ஒற்றுமை மட்டுமல்ல குடும்பத்தினரின் ஒற்றுமையையும் தீர்மானிக்கிறது.

பத்து பொருத்தங்கள்:

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இவருக்கு இவர் தான் என்பது கடவுள் போட்டு வைத்த முடிச்சு. ஒருவர் வாழ்க்கையில் அவர்களின் கர்ம வினைப்படி நடக்க வேண்டியது நடந்தே தீரும். அவர்களின் ஜாதக கட்டத்தில் 7வது இடத்தை வைத்தே அவர்களின் திருமண வாழ்வும் அமைகிறது. மேலும் திருமணத்தின் போது 10 பொருத்தங்கள் பார்ப்பது மிக முக்கியமானது ஆகும்.

marriage
marriage

தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை போன்ற 10 பொருத்தங்கள் நாம் அறிந்ததே. இதில் 7 பொருத்தம் சரியாக இருந்தாலும் முக்கிய பொருத்தங்களும் பார்க்கப்பட வேண்டும்.

marriage
marriage

ராசி பொருத்தம் மற்றும் ராசி அதிபதி பொருத்தம் என்பது தம்பதியரின் ஒற்றுமை மற்றும் அந்த குடும்பங்களின் ஒற்றுமையை குறிக்கும். பெண்ணின் ராசியை பொறுத்தே ஆணின் பெற்றோர்களின் ஒற்றுமை இருக்கும். எனவே ஒற்றுமையின் அடிப்படையில் இந்த இரண்டு பொருத்தங்களும் பார்க்கப்படுகிறது.

marriage

தின பொருத்தம் என்பது தம்பதியினரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை குறிப்பது. இந்த திருமணம் நடைபெறுவதே, தீர்க்க ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்காகவே. எனவே தான் தின பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதே போல தான் கண பொருத்தமும் முக்கியமான ஒன்று. அவர்களின் ஒற்றுமை, சுக வாழ்வு எப்படி இருக்கும் என்பதை இந்த பொருத்தம் முடிவு செய்கிறது.

marriage

வசிய பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் என்பது கணவன் மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு, காதல் மற்றும் தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். எனவே இந்த பொருத்தங்கள் சந்தோஷமான வாழ்விற்கு முக்கியம்.

love_marriage
love_marriage

மகேந்திர பொருத்தம் வம்சாவழியை குறிப்பது. அதாவது குலம் தழைக்க மற்றும் புத்திர பாக்கியம் கிட்ட இந்த மகேந்திர பொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் தனம் மற்றும் தான்யம் போன்ற விருத்திக்கு ஸ்திரி தீர்க்க பொருத்தம் முக்கியம்.

மேலும் தம்பதியினர் நீண்ட ஆயுளுடன் வாழ்வது மிக முக்கியமாகும். எனவே ரஜ்ஜு பொருத்தம் கண்டிப்பாக பொருந்தி இருக்க வேண்டும். மேலும் நாடி பொருத்தமும் முக்கியமாகும். ஏனெனில் இந்த பொருத்தம் இல்லையெனில் தம்பதிகளுக்கிடையே தோஷம் ஏற்படும். இதை வைத்து பார்த்தால் அனைவர்க்கும் 10 பொருத்தங்கள் ஒத்து போகாது. ஆனால் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் ஒத்து போவது அவசியம். ரஜ்ஜு, யோனி, வசியம், தினம், கணம் போன்றவை பொருந்தி இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here