ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கலந்த காமெடி கதையம்சம் உள்ள திரைப்படமாக வெளியாகி இருக்கும் ‘மார்க் ஆண்டனி’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
குறிப்பாக, இத்திரைப்படம் வெளியான ஒரே நாளில் 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெற்றியை ‘மார்க் ஆண்டனி’ படக்குழுவினர் கொண்டாடும் வேளையில் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் குமார் நடிகர் விஜயுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு, ‘இது என்னுடைய மறக்குமா நெஞ்சம் தருணம். இந்த தருணத்தில் இருந்து எல்லாம் முன்னேற ஆரம்பித்தது. நன்றி விஜய் அண்ணா’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.