
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. பெரிய எதிர்பார்ப்பில் பல தடைகளை உடைத்து ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவது மட்டுமன்றி நல்ல வசூலையும் அள்ளி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்த இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நேற்று வெளியான மார்க் ஆண்டனியின் முதல் நாள் உலக அளவில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்று பலரும் கூறி வருகின்றனர்.