யாரங்கே.. திரை விலகட்டும் – இன்று உலக தியேட்டர் தினம்!!

0
theatre

இன்று சர்வதேச தியேட்டர் தினம். ஒரு காலத்தில் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருந்து வந்த நாடக தியேட்டர்கள் குறைந்துவருவதை மக்களுக்கு நினைப்பூட்டும் விதத்தில் இன்று தியேட்டர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக தியேட்டர் தினம் இன்று

1962ஆம் ஆண்டு சர்வதேசிய தியேட்டர் தினம் துவங்கப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் மார்ச் 27ஆம் தேதி அதாவது இன்று உலக தியேட்டர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உலக தியேட்டர் தினத்தை நினைவு கூறும் வகையில் உலகமெங்கிலும் பல்வேறு மொழிகளில் நாடகங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தியேட்டர்கள் என்றால் திரைப்படங்கள் திரையிடப்படும் இடம் மட்டுமல்ல, பலதரப்பட்ட கலைகள் அதாவது இசை, நாடகம், நடனம், கச்சேரி போன்றவைகள் காட்சிப்படுத்தப்படும் இடமாகும். முந்தின காலங்களில் சினிமா இல்லாத நாட்களில் மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது நாடகங்கள் மட்டும் தான். இவை தான் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொழுதுபோக்காகவும் இருந்தது. காலங்கள் செல்ல மக்கள் நாடகங்களையும் தியேட்டர்களையும் மறந்துவிட்டனர்.

மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா வாக்கு சீட்டு முறை?? தேர்தல் ஆணையம் விளக்கம்!!

ஆனால் இன்று வரை உலக நாடுகள் பல தியேட்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதிலும் முக்கியமாக இலக்கியங்கள் அதிகமாக உருவாகும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றுவரை தியேட்டர்களில் நாடகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் ஆரம்பத்தில் உருது, சமஸ்கிருத மொழிகளில் தான் தியேட்டர் நாடகங்கள் இருந்தன.

பின்னர் தான் ஒவ்வொரு மொழிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் நாடகங்கள் அரங்கேறியது. இன்றும் கூட தமிழகத்தில் ஊர் திருவிழாக்கள், கோவில் விசேஷங்களில் நாடகங்கள் திரையிடப்படுகின்றன. இன்றைய காலத்தில் மொபைல் தியேட்டர் என்று சொல்லக்கூடிய, தெருக்களில் போடப்படும் நாடகங்கள் பிரபலமாகி வருகிறது. அதே சமயம் நலிந்து வரும் நாடக கலைகளை திரும்ப நிறுத்துவதற்கும் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here